Sunday, 27 July 2014
தெய்வப் புலவர் திருவள்ளுவர் பிறந்த இடம்
குறித்த சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை. ஆனாலும் அவர் கன்னியாகுமரியில்தான்
பிறந்தார் என்ற வாதத்திற்கு வலுவூட்டும் வகையில் புதிய தகவல் ஒன்றை குமரி மாவட்ட
வரலாறுமற்றும் கலை ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.
.
மயிலையில் பிறந்தார் என்று ஒரு கருத்தும், குமரி மாவட்டம்தான்
வள்ளுவரின் பிறப்பிடம் என்று ஒரு கருத்தும் நிலவி வருகிறது.இதுதொடர்பான ஆய்வுகள்
இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.
இந்த ஆய்வை குமரி மாவட்ட வரலாறு மற்றும் கலை
ஆராய்ச்சி மையமும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில்அவர்களுக்கு புதிய
தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதைக் கொண்டு, வள்ளுவர் பிறந்தது குமரி மாவட்டம்தான் என்று
அந்தமைய ஆய்வாளர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களான
கனி என்ற சமூக மக்களின் தெய்வமாக வள்ளுவர் விளங்கி வருவதாக இந்தமையத்தின் ஆய்வில்
தெரிய வந்துள்ளது. கூவைக்காடு பகுதியில் உள்ள வள்ளுவன் கல்பொற்றை, வள்ளுவத்தி கல்பொற்றைஆகிய
இரு குன்றுப் பகுதிகளிலும் அதிக அளவில் கனி சமூக மக்கள் வசித்து வருகிறார்கள்.
டாக்டர் பத்மநாபன் தலைமையில், டாக்டர் குமார், டாக்டர் சுரேஷ் உள்ளிட்டோர்
கொண்ட ஒரு ஆய்வுக் குழு சமீபத்தில், இந்தஇரு பாறைப் பகுதிகளைச் சுற்றிலும் உள்ள
கிராமங்களில் வசித்து வரும் கனி சமூக மக்களிடையே ஆய்வு நடத்தியது.
இந்தக் கிராமங்களில் மொத்தம் 32 கனி சமூக குடும்பங்கள்
வசித்து வருகின்றன. இவர்களில் வயதில் மூத்தவரான (இவர் தான்சமூகத் தலைவரும் கூட)
கலியன் கனி என்பவர் கூறுகையில்,
வள்ளுவர் மன்னராக இருந்தவர். வள்ளுவ நாடு
முழுவதையும் ஆண்டு வந்தவர். இந்த மலைக் குன்றுகளைச் சுற்றிய காட்டுப்பகுதிகளில்
அவர் வேட்டையாட வருவார். பின்னர் வேட்டையை எல்லாம் நிறுத்திவிட்டு தவ யோகியாக
மாறினார் என்பதுஎங்கள் சமூகத்தில் வழிவழியாய் சொல்லப்பட்டு வந்துள்ளது.
வள்ளுவர் வாழ்ந்த பகுதிகளையும், இரு மலைக் குன்றுகளையும்
நாங்கள் மிகவும் புனிதமாக கருதுகிறோம். அங்கு பரம்பரைபரம்பரையாக வழிபாடுகளும்
நடத்தி வருகிறோம் என்றார்.
வள்ளுவன் கொடித்தி என்ற பெயரில் நடக்கும் ஒரு
சடங்கு நிகழ்ச்சியும் இப்பகுதியில் பிரசித்தமானது. வள்ளுவன் பாதம் என்றஇடத்தில்
இந்த சடங்கு நடத்தப்படுகிறது. இந்த சடங்கைச் செய்தால், நல்ல மழை பெய்யும் என்ற
நம்பிக்கை கனி சமூகமக்களிடையே நிலவுகிறது.
இந்த வழிபாடுகளின்போது செண்டை மேளம் முழங்க, திருவள்ளுவருக்கு தேனும், திணையும் படைக்கிறார்கள்.
சர, கனி சமூகத்தினரின் பழக்க, வழக்கங்கள், அவர்கள் சொல்லும் கதைகளை
மட்டுமே வைத்து எப்படி வள்ளுவரின்பிறப்பிடத்தை நிர்ணயிக்க முடியும் என்ற
கேள்விக்கு டாக்டர் சுரேஷ் இப்படி விளக்கம் தருகிறார்.
அவர் கூறுகையில், வள்ளுவரின் சில குறள்களில் கனி சமூகத்தினர்
குறித்து அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். 274வது திருக்குறள் இதற்கு ஒருஉதாரணம். அந்தக்
குறளில், பறவைகள் போல மாறு குரலில்
கூவி, அவற்றை வரவழைத்து
வேட்டையாடுவது குறித்து அந்தக்குறளில் வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.இது கனி
சமூகத்தினரிடம் காணப்படும் ஒரு பழக்கமாகும் என்கிறார் சுரேஷ்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்த இடத்தில்
வள்ளுவர் பிறந்திருப்பார் என்ற கேள்விக்கும் கிட்டத்தட்ட
விடைகண்டுபிடித்துள்ளார்கள் இந்த ஆய்வு மையத்தினர்.
Subscribe to:
Posts (Atom)