குமரி மாவட்டத் தமிழ்
|
குமரி மாவட்டத் தமிழ் (நாஞ்சில் நாட்டுத் தமிழ்) என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் |
ஒன்று. தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி
மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி மலையாள dfdfவாயிலாகவும் இருப்பதால்
மலையாளச் சொற்களும் இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் கலந்திருக்கும்.
இன்றைய குமரி மாவட்டத் தமிழ் மூன்று வகைப்படுகிறது.
1. தோவாளை, அகத்தீஸ்வரம் வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய நாஞ்சில் நாட்டின்
தமிழ்.
2.கல்குளம், விளவங்கோடு வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய இடை நாட்டின் தமிழ்.
3.கடலோர கிராமங்களை உள்ளடக்கிய மீனவர்த் தமிழ்.
இதில் இடை நாட்டின் தமிழிலேயே, மலையாள மொழியின் தாக்கம் தென்படும். மற்ற இரு
வகைகளிலும் மலையாளம் அவ்வளவாக கலந்திராது, தமிழ் சொற்களின் /
இலக்கணத்தின் மருவலே அதிகம் காணப்படும்.
• அங்கன - அங்கே - "மோனே, அங்கன போவாதே"
• அங்கோடி - அந்த வழியாக
• அடிச்சு மாத்துவது - திருடுவது
• அல்லாம- அல்லாமல், இல்லாமல்
• அவிய இவிய / எவிய அவர்கள் / இவர்கள் / எவர்கள்
• அற்றம் / அத்தம் - கடைசி, இறுதி, முடிவு, கரை
• அய்யம் / ஐயம் கெட்டது, கெட்டுப்போனது
• அளி / அழி - கம்பி போட்ட (அளிபோட்ட வீடு)
• அறுப்பு - திட்டு, வசை, திட்டுதல்
• அன்னா - அதோ, அங்கே "அன்னா நிக்காம்லே"
–
• அனக்கம் - சத்தம், அசைவு, இயக்கம் "என்ன அனக்கமே இல்லை!" - "
• ஆட்டும் -ஆகட்டும் என்பதன் மருவல்
• இங்கன - இங்கே
• இங்கோடி - இந்த வழியாக
• இரி - இரு, உட்கார்
• இன்னா - இதோ, இங்கே
• எங்கோடி எந்த வழியாக
• ஒக்கும் / ஒக்காது முடியும் / முடியாது
• ஒடக்கு / உடக்கு சண்டை, மனக்கசப்பு
• ஒடுக்கம் பிறகு, "ஒடுக்கம், என்ன ஆச்சி?" - "அப்புறம், என்ன ஆயிற்று?"
• ஒருபாடு / ஒருவாடு நிறைய மலையாள வழக்கு
• ஒறச்சு- உரக்க
• ஓர்மை / ஓற்மை - நினைவு-ஞாபகம் மலையாள வழக்கு. "ஓர்மை இருக்கா?"
• கச்சவடம் வியாபாரம் மலையாள வழக்கு
• கடுவன் ஆண் மிருகம் "கடுவன் பூனை" - "ஆண் பூனை"
• கம்புக் கூடு - கைக்குழி, அக்குள், கக்கம், கழக்கட்டு
• கறுக்கு / கறுக்கல்- இருளாகும் மாலை பொழுது, அந்தி, முன்னிரவு
• கஷண்டி- தலை வழுக்கை மலையாள வழக்கு.
• கிறங்கு - / கெறங்கு / கறங்கு சுற்று "வெயில்ல கடந்து கறங்காதே" - "வெயிலில்
சுற்றாதே"
• குட்டுவம், குத்துப்போணி - பெரிய, வாய் அகன்ற பாத்திரம்
• கும்பிளி -(நீர்) குமிழி
• குழை / கொழை -ஆடு மாடுகளுக்கு உணவாக வைக்கப்படும் இலை''
• குறுக்கு - பின் இடுப்பு
• கைலேஞ்சி -கைக்குட்டை
• கொண்டி - கதவு மற்றும் சாளரங்களை இறுக்கிச் சார்த்தப் பயன்படும் கொக்கி போன்ற அமைப்பு
• கொமை - ஏளனம் செய், கிண்டல் செய்
• கோரி குடி - மொண்டு குடி
• கொள்ளாம் நன்று / நன்றாக-உள்ளது மலையாள வழக்கு.
• சக்கரம் - பணம்
• சக்கைப் / சக்கப் பழம் - பலாப் பழம் மலையாள வழக்கு
.
• சட்டுவம் - தட்டையான கரண்டி தோசைக் கரண்டி
• சப்பட்டை கெட்டுப்போன, கெட்டவர்
• சமுட்டுதல் / சமுண்டு / சவுட்டுதல் / சவட்டுதல் மிதித்தல்
• சருவம் - சிறிய பாத்திரம்
• சள்ளை- தொல்லை "அவன் ஒரு சள்ளையக்கும், கேட்டியா" - "
• சாப்பு / சேப்பு - சட்டை பை
• சாரம் - லுங்கி
• சுண்டு - உதடு மலையாள வழக்கு.
• செவிட் - கன்னம்+காது சேர்ந்த பகுதி, மீன்களுக்கு செவுள் இருக்கும் பகுதி "அவன்
செவிட்ல பொளீர்னு அறஞ்சான்".
• செறை - தொல்லை, எரிச்சல்
• செறுப்பம் / சிறுப்பம் - சிறு வயது
• சொக்காரன், சொக்காரி சொந்தக்காரன், சொந்தக்காரி / சகோதரன், சகோதரி / ஒன்று
விட்ட பெரியப்பா சித்தப்பா பிள்ளை
• சொளவு / சொளகு முறம்
• தட்டு - மாடி
• தள்ளை - தாய்
• தாக்கோல்- சாவி
• துவற்து / தொவற்து - துடைப்புத் துண்டு
• தொரப்ப - துடைப்பம்
• தொலி -தோல் "பளத்த தின்னிட்டு தோலிய தொட்டீல போடு மக்கா,
• தொளி - சேறு
• நிக்கான் / நிக்கா - வேலை செய்கிறான் / வேலைசெய்கிறாள்
• படக்கு - பட்டாசு
• பண்டு - முன்பு, பழைய காலம் மலையாள வழக்கு
• பய்ய / பைய - மெதுவாக, மெல்ல
• பாச்சா - கரப்பான்பூச்சி
• புள்ளோ - மகனே / மகளே, செல்லமாக யாரையும் அழைப்பது
• புறத்தால / புறத்தோடி / பொறத்தால / பொறத்தோடி பின்னால்,
• பெர கதவு - அறை கதவு
• பெஹளம் - அமைதியின்மை / கொந்தளிப்பு /
• பொத்தை - உடல்பருத்த, குண்டு, தடித்த
• பொறவு - பிறகு, அப்புறம் "பொறவு, "
• பொறத்தால - பின்னால் "
• போஞ்சி - எலுமிச்சை பழரசம்
• போட்டு - அது போகட்டும், கவலை கொள்ளாதே
• போணி -வாய் அகன்ற உயரம் குறைந்த பாத்திரம்
• மயினி -மச்சினி(மச்சினன்), கொழுந்தி,
கொழுந்தியாள், மாப்பிளையின் தங்கை, அத்த பொண்ணு, மாமன் பொண்ணு,
மனைவியின் அக்கா "மதினி" என்பதின் மரூஉ
• மலத்து - கவுத்து
• மற்றவன் / மத்தவன் / மற்றவள் / மத்தவள் / மற்றது / மத்தது / மற்றவரு / மத்தவரு
இங்கு இல்லாத இன்னொருவர், மூன்றாமவர் "அதோ, மத்தவரு வறாரு"
• மனசிலாகுதல் / மனசிலாவுதல் - புரிதல் "
• மாறி - அதற்கு பதிலாக, அதற்கு மாறாக, ஆனால்
• முக்கு - மூலை
• முடுக்கு - சந்து
• மோந்தி - அந்தி, சாயுங்காலம்
• வண்ணம் - உடல்பருத்த, குண்டு, தடித்த "
• வாரியல் துடைப்பம் வாரிக்கட்டை - துடப்பக்கட்டை
• விரவி பிசைந்து / கலந்து
• விளம்பு - பரிமாறு
• விளை,வெளை - விளைநிலம் / தோப்பு
• வெக்கை - சூடு பொதுவழக்கிலும் உள்ளது
• வெட்டோத்தி - வெட்டுக்கத்தி
• வெப்ராளம் - மனப்புழுக்கம் மலையாள வழக்கு.