Tuesday, 4 March 2014

குமரி மாவட்டத் தமிழ் (நாஞ்சில் நாட்டுத் தமிழ்)




குமரி மாவட்டத் தமிழ்



குமரி
 மாவட்டத் தமிழ் (நாஞ்சில் நாட்டுத் தமிழ்என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் 
ஒன்றுதமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி 

மாவட்டத்தில் வழக்கில் உள்ளனஇப்பகுதி மலையாள dfdfவாயிலாகவும் இருப்பதால்

மலையாளச் சொற்களும் இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் கலந்திருக்கும்

இன்றைய குமரி மாவட்டத் தமிழ் மூன்று வகைப்படுகிறது.


1. தோவாளைஅகத்தீஸ்வரம் வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய நாஞ்சில் நாட்டின் 

தமிழ்.

2.கல்குளம்விளவங்கோடு வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய இடை நாட்டின் தமிழ்.


3.கடலோர கிராமங்களை உள்ளடக்கிய மீனவர்த் தமிழ்.


இதில் இடை நாட்டின் தமிழிலேயேமலையாள மொழியின் தாக்கம் தென்படும்மற்ற இரு

வகைகளிலும் மலையாளம் அவ்வளவாக கலந்திராதுதமிழ் சொற்களின் / 

இலக்கணத்தின் மருவலே அதிகம் காணப்படும்.





THANK YOU FOR VISIT HERE

 அங்கன - அங்கே - "மோனேஅங்கன போவாதே


• அங்கோடி - அந்த வழியாக 


• அடிச்சு மாத்துவது - திருடுவது 


• அல்லாமஅல்லாமல்இல்லாமல்


• அவிய இவிய / எவிய அவர்கள் / இவர்கள் / எவர்கள் 


• அற்றம் / அத்தம் - கடைசிஇறுதிமுடிவுகரை

 
• அய்யம் / ஐயம் கெட்டதுகெட்டுப்போனது

 
• அளி / அழி - கம்பி போட்ட (அளிபோட்ட வீடு)


• அறுப்பு - திட்டுவசைதிட்டுதல்


• அன்னா - அதோஅங்கே "அன்னா நிக்காம்லே"

 – 
• அனக்கம் - சத்தம்அசைவுஇயக்கம் "என்ன அனக்கமே இல்லை!" - "


• ஆட்டும் -ஆகட்டும் என்பதன் மருவல்


• இங்கன - இங்கே 

• இங்கோடி - இந்த வழியாக 


• இரி - இருஉட்கார் 


• இன்னா - இதோஇங்கே 


• எங்கோடி எந்த வழியாக 


• ஒக்கும் / ஒக்காது முடியும் / முடியாது 


• ஒடக்கு / உடக்கு சண்டைமனக்கசப்பு 


• ஒடுக்கம் பிறகு, "ஒடுக்கம்என்ன ஆச்சி?" - "அப்புறம்என்ன ஆயிற்று?"


• ஒருபாடு / ஒருவாடு நிறைய மலையாள வழக்கு


• ஒறச்சுஉரக்க 


• ஓர்மை / ஓற்மை - நினைவு-ஞாபகம் மலையாள வழக்கு. "ஓர்மை இருக்கா?"

• கச்சவடம் வியாபாரம் மலையாள வழக்கு


• கடுவன் ஆண் மிருகம் "கடுவன் பூனை" - "ஆண் பூனை"


• கம்புக் கூடு - கைக்குழிஅக்குள்கக்கம்கழக்கட்டு

 
• கறுக்கு / கறுக்கல்இருளாகும் மாலை பொழுதுஅந்திமுன்னிரவு 


• கஷண்டிதலை வழுக்கை மலையாள வழக்கு.


• கிறங்கு - / கெறங்கு / கறங்கு சுற்று "வெயில்ல கடந்து கறங்காதே" - "வெயிலில் 

சுற்றாதே"

• குட்டுவம்குத்துப்போணி - பெரியவாய் அகன்ற பாத்திரம் 


• கும்பிளி -(நீர்குமிழி 


• குழை / கொழை -ஆடு மாடுகளுக்கு உணவாக வைக்கப்படும் இலை''
 
• குறுக்கு - பின் இடுப்பு 


• கைலேஞ்சி -கைக்குட்டை

 
• கொண்டி - கதவு மற்றும் சாளரங்களை இறுக்கிச் சார்த்தப் பயன்படும் கொக்கி போன்ற அமைப்பு 


• கொமை - ஏளனம் செய்கிண்டல் செய் 


• கோரி குடி - மொண்டு குடி 


• கொள்ளாம் நன்று / நன்றாக-உள்ளது மலையாள வழக்கு.


• சக்கரம் - பணம் 


• சக்கைப் / சக்கப் பழம் - பலாப் பழம் மலையாள வழக்கு
.
• சட்டுவம் - தட்டையான கரண்டி தோசைக் கரண்டி


• சப்பட்டை கெட்டுப்போனகெட்டவர் 


• சமுட்டுதல் / சமுண்டு / சவுட்டுதல் / சவட்டுதல் மிதித்தல் 


• சருவம் - சிறிய பாத்திரம் 


• சள்ளைதொல்லை "அவன் ஒரு சள்ளையக்கும்கேட்டியா" - "


• சாப்பு / சேப்பு - சட்டை பை 


• சாரம் - லுங்கி 


• சுண்டு - உதடு மலையாள வழக்கு.
• செவிட் - கன்னம்+காது சேர்ந்த பகுதிமீன்களுக்கு செவுள் இருக்கும் பகுதி "அவன்

செவிட்ல பொளீர்னு அறஞ்சான்".

• செறை - தொல்லைஎரிச்சல்

 
• செறுப்பம் / சிறுப்பம் - சிறு வயது

 
• சொக்காரன்சொக்காரி சொந்தக்காரன்சொந்தக்காரி / சகோதரன்சகோதரி / ஒன்று

விட்ட பெரியப்பா சித்தப்பா பிள்ளை 

• சொளவு / சொளகு முறம்


• தட்டு - மாடி 


• தள்ளை - தாய் 

• தாக்கோல்சாவி 


• துவற்து / தொவற்து - துடைப்புத் துண்டு 


• தொரப்ப - துடைப்பம் 


• தொலி -தோல் "பளத்த தின்னிட்டு தோலிய தொட்டீல போடு மக்கா,

 
• தொளி - சேறு

 
• நிக்கான் / நிக்கா - வேலை செய்கிறான் / வேலைசெய்கிறாள்


• படக்கு - பட்டாசு 


• பண்டு - முன்புபழைய காலம் மலையாள வழக்கு


• பய்ய / பைய - மெதுவாகமெல்ல 


• பாச்சா - கரப்பான்பூச்சி


• புள்ளோ - மகனே / மகளேசெல்லமாக யாரையும் அழைப்பது
 
• புறத்தால / புறத்தோடி / பொறத்தால / பொறத்தோடி பின்னால்


• பெர கதவு - அறை கதவு 


• பெஹளம் - அமைதியின்மை / கொந்தளிப்பு / 


• பொத்தை - உடல்பருத்தகுண்டுதடித்த 


• பொறவு - பிறகுஅப்புறம் "பொறவு, "


• பொறத்தால - பின்னால் "


• போஞ்சி - எலுமிச்சை பழரசம் 


• போட்டு - அது போகட்டும்கவலை கொள்ளாதே 


• போணி -வாய் அகன்ற உயரம் குறைந்த பாத்திரம்

 
• மயினி -மச்சினி(மச்சினன்), கொழுந்தி


கொழுந்தியாள்மாப்பிளையின் தங்கைஅத்த பொண்ணுமாமன் பொண்ணு,  


மனைவியின் அக்கா "மதினிஎன்பதின் மரூஉ

• மலத்து - கவுத்து

 
• மற்றவன் / மத்தவன் / மற்றவள் / மத்தவள் / மற்றது / மத்தது / மற்றவரு / மத்தவரு


 ங்கு இல்லாத இன்னொருவர்மூன்றாமவர் "அதோமத்தவரு வறாரு"

• மனசிலாகுதல் / மனசிலாவுதல் - புரிதல் "

• மாறி - அதற்கு பதிலாகஅதற்கு மாறாகஆனால் 


• முக்கு - மூலை 


• முடுக்கு - சந்து 


• மோந்தி - அந்திசாயுங்காலம்

 
• வண்ணம் - உடல்பருத்தகுண்டுதடித்த "


• வாரியல் துடைப்பம் வாரிக்கட்டை - துடப்பக்கட்டை


• விரவி பிசைந்து / கலந்து 


• விளம்பு - பரிமாறு 


• விளை,வெளை - விளைநிலம் / தோப்பு 


• வெக்கை - சூடு பொதுவழக்கிலும் உள்ளது


• வெட்டோத்தி - வெட்டுக்கத்தி

 
• வெப்ராளம் - மனப்புழுக்கம் மலையாள வழக்கு


"லெய்வெப்ராளப்படாதே!" - "மனப்புழுகம் கொள்ளாதே"



Source : Wikipedia – Click the below link will get more.

.
http://ta.wikipedia.org/wiki/குமரி_மாவட்டத்_தமிழ்

ADMIN, BKNS

1 comment:

Anonymous said...

very good