Thursday, 15 May 2014

Padmanabapuram now World Heritage site

நாகர்கோவில்: பத்மநாபபுரம் அரண்மனைக்கு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் இந்த அரண்மனையை பார்க்க உலக நாடுகளில் இருந்து வரும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

400 ஆண்டுகள் பழமையானது பத்மநாபபுரம் அரண்மனை. குமரி மாவட்டம் 1956 நவம்பர் மாதம் 1 ம்தேதி தமிழகத்துடன் இணைந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்ட போது பத்மநாபபுரம் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. 

இங்கு தலைமையிடமாக கொண்டு திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி செய்த போது இந்த அரண்மனை கட்டப்பட்டது. 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த அரண்மனை முற்றிலும் மரத்தாலானது. பச்சிலைச்சாறு, முட்டை வெள்ளைக்கரு, சிரட்டைக்கரி, சுண்ணாம்பு ஆகிய கலவையால் உருவாக்கப்பட்டது. 3 அடுக்கு கொண்ட இந்த அரண்மனையின் 3 வது அறையில் பத்மநாபசுவாமி அருள்பாலிக்கிறார். மன்னர் உடைவாள் உப்பிரிகை மாளிகையில் (தாய்க்கொட்டரத்தின் 3 வது நிலை ) இன்னும் உள்ளது. ஆண்டுதோறும் இந்த மாளிகை கெமிக்கல் முறையுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
============================================================================================

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaranகுமரி: பத்மநாபபுரம் அரண்மனை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் அரண்மனையை உலக பாரம்பரிய சின்னமாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளதாக திருவனந்தபுரத்தில் கேரள மாநில கலாச்சாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப் தகவல் தெரிவித்துள்ளார். பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் விளங்கியது குறிப்பிடத்தக்கது.. 
Click image to know about ASI Official Site.
HTML tutorial

Properties inscribed on the World Heritage List (30)

Cultural
Natural

No comments: