Sunday, 8 June 2014

Dear All,

நம் குமரிமாவட்ட எழில் கொஞ்சும் படங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பார்க்க....இங்கே அழுத்தவும்.

OUR FACEBOOK PAGE

ஜூன் 8: உலக பெருங்கடல் தினம்

** கடலையும் காதல் செய்வோம்!! ** 

உலகை வளைத்து
உள்ளே நாட்டை துளைத்து
நுரைத்து பொங்கும் நாலு பெருங்கடல்!!

பவளப்பாறைகள் அதை
உண்ணும் மீன்கள்
மீன் பிடிக்கும் மீனவன் என
ஒரு சங்கிலி தொடருக்கு ஆதாராம்!!

கட்டுமரம் முதல் கப்பல் வரை
கட்டிக் காத்திடும்
கடல்ராஜா இந்த பெருங்கடல்கள்!!

நீலத்திமிங்கலம் நீந்தி பழகிடும்
பென்குவின்களும் நடந்து சென்றிடும்
டிஸ்கவரி காட்டாத இன்னும் பல
உயிரினங்களை உள்ளே வைத்து
ஆச்சர்யம் காட்டும் ஆழி பெருங்கடல்!!

தண்ணீர் கொண்டு நாட்டை பிரிக்கும்
எல்லை என்றனர் சிலர்!!
ஆனால்
தண்ணீர் கொண்டு நாட்டை இணைக்கும்
பாலம் என்றனர் பலர்!!

கடலின் அழகை ரசிக்க நினைத்தால்
மகிழ்ச்சி பொங்கிடும்!!
மாசுபடுத்தி அழிக்க நினைத்தால்
ஆழி பேரலை ஊரை அழித்துடும்!!

கடற்கரையில்
காதல் செய்யும் நாம்
கொஞ்சம் கடலையும்
காதல் செய்வோம்!!


---- Thanks to VIKATAN


No comments: