Sunday, 3 August 2014

NANJIL TAMIL

குமரி மாவட்டத் தமிழ் (நாஞ்சில் நாட்டுத் தமிழ்) என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்றாகும். தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் மலையாளச் சொற்களும் இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் கலந்திருக்கும். இன்றைய குமரி மாவட்டத் தமிழ் மூன்று வகைப்படுகிறது.

CLICK HERE TO KNOW ABOUT OUR NANJIL TAMIL

1தோவாளை, அகத்தீஸ்வரம் வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய நாஞ்சில் நாட்டின் தமிழ்
2கல்குளம், விளவங்கோடு வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய இடை நாட்டின் தமிழ்.
3கடலோர கிராமங்களை உள்ளடக்கிய மீனவர்த் தமிழ்
இதில் இடை நாட்டின் தமிழிலேயே, மலையாள மொழியின் தாக்கம் தென்படும். மற்ற இரு வகைகளிலும் மலையாளம் அவ்வளவாக கலந்திராது, தமிழ் சொற்களின் / இலக்கணத்தின் மருவலே அதிகம் காணப்படும்.
கீழ்க்காணும் விளக்கங்களில், "மலையாள வழக்கு" என்பது "மலையாளத்தில் இருந்து மருவியது" என்று பொருள் படாது. மாறாக, "இந்த சொல் பிற வட்டார வழக்கில் (அவ்வளவாக) பயன்படுத்தப்படாமல், குமரி மாவட்டத் தமிழிலும் மலையாளத்திலும் (மட்டுமே) வழக்கத்தில் உள்ளது" என்றே பொருள் படுகிறது. அச்சொற்கள் அடிப்படையில் தமிழ் வேர் கொண்ட சொற்களாகவோ, சமற்கிருத வேர் கொண்ட சொற்களாகவோ, அல்லது மலையாளத்தின் தனித்துவமான சொற்களாகவோ இருக்கலாம்.

THANK YOU FOR VISIT HERE

CLICK HERE TO KNOW ABOUT OUR NANJIL TAMIL


No comments: