Sunday, 2 November 2014

குமரியிலிருந்து திருச்சி மார்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

PRESS RELEASE

குமரியிலிருந்து திருச்சி மார்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை


Inbox
x

KUMARI NALA SANGAM bhelkumari@gmail.com

6:59 PM (16 minutes ago)
to SUBU, bcc: dmrnglnews, bcc: tmglvivek, bcc: mahesh.ie, bcc: subramonian.ma., bcc: mahesh.newindi., bcc: masanamuthu75, bcc: haridasstamil, bcc: palaningl, bcc: editornglthant., bcc: jebarsonthinam., bcc: jebarson.h, bcc: thiruvattaruje., bcc: sunarivarasu, bcc: thinamurasu, bcc: thinamurasu, bcc: thinamurasu111, bcc: nanjil.vikatan, bcc: arvind.essaki, bcc: rahul_essaki20., bcc: namadhumgr.rad., bcc: namadhumgrnews, bcc: namadhu_mgr, bcc: makkalkural.ne., bcc: dhinasuriyan
THANK YOU FOR VISIT HERE

குமரியிலிருந்து திருச்சி மார்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை:

             “பெல் குமரி நல சங்கம்” எனும் அரசியல், சாதி மற்றும் மதங்களுக்கு அப்பாற்பட்ட நல சங்கத்தை 1975-ல் பெல் திருச்சியில் தொடங்கி 1984-ல் முறைப்படி பதிவு செய்து, இன்று வரை பாரத மிகுமின் நிறுவனம் மற்றும் அதை சார்ந்த துணை நிறுவனங்களில் பணியாற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த 400 குடும்பங்களை உறுப்பினர்களாக கொண்டு அவர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் தோள் கொடுத்து செவ்வனே செயலாற்றி வரும் ஓர் அமைப்பு ஆகும். 

        நமது மாவட்டத்தை சார்ந்த பெருவாரியான மக்கள் திருச்சியில் உள்ள பெல், ரயில்வே, தேசிய தொழில்நுட்ப கழகம் மற்றும் பல்வேறு மத்திய, மாநில அரசு பணிகளில் பல ஆண்டுகளாய் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு பணியாற்றி வரும் நாங்கள் இங்கு குமரி மாவட்டத்துடன் அன்பெனும் பிணைப்போடு வாழ்ந்து வருகிறோம். எங்களின் நெடுநாளைய கோரிக்கை குமரி மாவட்டத்திலிருந்து போதிய ரயில் வசதி வேண்டும் என்பது ஆகும். தற்போது இயங்கி கொண்டிருக்கும் சென்னை மார்க்கம் ரயில்கள் நடுஇரவு நேரங்களில் திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் சென்னை செல்லும் பயணிகளுக்கே முக்கியத்தும் கொடுத்து முன்பதிவு கோட்ட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது சென்னை செல்லும் பயணிகளுக்கே முன்பதிவு கிடைக்காத நிலை உள்ளது. இதனால் இந்த ரயில்களில் குமரியிலிருந்து திருச்சிக்கு வருவதற்கும் இங்கிருந்து நமது மாவட்டமான குமரிக்கு செல்வதற்கும்  பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே கீழே குறிப்பிடபட்டுள்ள மார்க்கங்களில் ரயில்கள் இயக்கினால் தென் மாவட்டங்களைச் சார்ந்த அனைத்து மக்களும் கால, பண, விடுப்பு விரையமின்றி மகிழ்வானதொரு இரயில் பயணத்தை மேற்கொள்ளலாம்.

திருச்சி – திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு:

         திருச்சியிலிருந்து அதிகாலை 2:00 மணிக்கு நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் அனந்தபுரி ரயில் புறப்பட்டு சென்ற பிறகு மதியம் ஒரு மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே உள்ளது. இந்த இரண்டு ரயில்களுக்கு இடையே சுமார் 10 மணி நேரம் எந்த ஒரு ரயிலும் இல்லை. திருச்சியிலிருந்து குமரிக்கு செல்ல திருச்சியை சார்ந்த பயணிகளுக்கு பயன்படும் விதமாக காலஅட்டவணையில் ஓர் தினசரி ரயில் கூட இதுவரை இயக்கப்படவில்லை. திருச்சியிலிருந்து காலை 7:15 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு மதியம் ஒரு மணிக்கு செல்லுமாறு இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படுகிறது.  இந்த ரயிலை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்தால் திருச்சி மற்றும் திருச்சியின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பகுதியை சார்ந்த மக்களுக்கு குமரி மற்றும் திருவனந்தபுரம் வரை செல்ல மிகவும் உதவியாக இருக்கும்.  

கன்னியாகுமரி – புதுச்சேரி வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை:

          கன்னியாகுமரியிலிருந்து திருச்சி வழியாக புதுச்சேரிக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாராந்திர ரயில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து முதல் முறையாக தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களான அருப்புகோட்டை, சிவகங்கை தேவகோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மைலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி போன்ற பகுதிகளை ரயில் மார்க்கம் நேரடியாக முதல் முறையாக இணைக்கிறது. இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்த பகுதி பயணிகளால் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் காலஅட்டவணையை மாற்றி திருச்சிக்கு அதிகாலை 3:00 மணிக்கு வந்து சேருமாறும் இங்கிருந்து இரவு 8:00 மணிக்கு புறப்படுமாறு கால அட்டவணையை மாற்றி இயக்க வேண்டும்.

கொச்சுவேலியிருந்து நாகர்கோவில், திருச்சி வழியாக காரைக்காலுக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க கோரிக்கை:

    திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கும், இந்துக்கள் திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கும், முஸ்லீம்கள் நாகூர் தர்காவிற்கும் தினசரி பயணிக்கின்றனர். இவர்களின் வசதிக்காக தென் மாவட்டங்களிலிருந்து செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. தென் மாவட்டங்களில் உள்ள பக்தர்கள் மூன்று மதங்களையும் சார்ந்த ஆன்மீக இடங்களுக்கு செல்ல வசதிக்காக கொச்சுவேலியிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் வழியாக காரைக்காலுக்கு  தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுகிறது.

Thanks & Regards,
B.G.SUBRAMONIA PILLAI
Secretary
BHEL KUMARI NALA SANGAM
(Estd., 1975, Reg. No.: 9/1984)
3/B, Thiruvenkada Nagar,
Trichy-13.
Mobile: 9489884239


PRESIDENT : R. GANESAN
VICE PRESIDENT : R. SUBRAMONIAN
SECRETARY : B.G SUBRAMONIA PILLAI
TREASURER : A. KARTHIKEYAN
ASST. SECRETARY : M. PAKKEER MYTHEEN

NOVERMBER-1
HAPPY BIRTHDAY TO OUR BELOVED KUMARI MAVATTAM

 **எங்கள் குமரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்***
இந்த விடுதலை போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த எங்கள் பாட்டன்மார் அனைவருக்கும்,போராடிய வீர தமிழர்கள் அனைவர்களுக்கும் வீர வணக்கம்கள் .திருவிதாங்கூர் ஆட்சியின் கீழிருந்த கன்னியாகுமரி மாவட்டம் 1956 நவம்பர் ஒன்றில் தமிழ்நாட்டோடு இணைந்து 59 ஆவது வருடம் இன்று பிறந்துள்ளது.குமரி விடுதலைக்க போராடிய போராட்ட தலைவர்கள்
மார்ஷல் ஏ. நேசமணி
அப்துல் ரசாக்
குஞ்சன் நாடார்
தாணுலிங்க நாடார்
பொன்னப்ப நாடார்
சிதம்பர நாதன் நாடார்
வில்லியம் நாடார் ஆவர் ஆனால்இணைந்தபிறகு 59 ஆன்டுகள் ஆகியும் கன்னியாகுமரி மாவட்டம் இன்றுவரை தமிழ்நாட்டு ஆட்சியாளர்களால் புறகணிக்கப்பட்டே வருகிறது.
அதற்க்கு எங்கள் சாலைகளே சாட்சி ...
அனாலும் எங்கள் குமரி மக்கள் படிப்பிலும் ,உழைப்பிலும் ,விடாமுயற்சியால் தன் கையே தனக்குதவி என்று வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் வேலை செய்து உழைப்பால் உயர்ந்து நிற்கின்றனர் .
மலையாளிகள் எங்களை பாண்டிகள் என்றும் நாகர்கோவிலை தாண்டினால் வந்தோடி மலையாளிகள் என்று அழைத்தாலும் அணைத்து உலக மக்களும் வியக்கும் வண்ணம் வள்ளுவ தமிழராகிய நாங்கள் அணைத்து துறைகளிலும் வென்று தமிழர் பெருமையை நிலைநாட்டி வருகிறோம் .
வாழ்க தமிழ்!!!! வளர்க குமரி தமிழர்கள் !!!!!!