Sunday, 2 November 2014

NOVERMBER-1
HAPPY BIRTHDAY TO OUR BELOVED KUMARI MAVATTAM

 **எங்கள் குமரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்***
இந்த விடுதலை போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த எங்கள் பாட்டன்மார் அனைவருக்கும்,போராடிய வீர தமிழர்கள் அனைவர்களுக்கும் வீர வணக்கம்கள் .திருவிதாங்கூர் ஆட்சியின் கீழிருந்த கன்னியாகுமரி மாவட்டம் 1956 நவம்பர் ஒன்றில் தமிழ்நாட்டோடு இணைந்து 59 ஆவது வருடம் இன்று பிறந்துள்ளது.குமரி விடுதலைக்க போராடிய போராட்ட தலைவர்கள்
மார்ஷல் ஏ. நேசமணி
அப்துல் ரசாக்
குஞ்சன் நாடார்
தாணுலிங்க நாடார்
பொன்னப்ப நாடார்
சிதம்பர நாதன் நாடார்
வில்லியம் நாடார் ஆவர் ஆனால்இணைந்தபிறகு 59 ஆன்டுகள் ஆகியும் கன்னியாகுமரி மாவட்டம் இன்றுவரை தமிழ்நாட்டு ஆட்சியாளர்களால் புறகணிக்கப்பட்டே வருகிறது.
அதற்க்கு எங்கள் சாலைகளே சாட்சி ...
அனாலும் எங்கள் குமரி மக்கள் படிப்பிலும் ,உழைப்பிலும் ,விடாமுயற்சியால் தன் கையே தனக்குதவி என்று வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் வேலை செய்து உழைப்பால் உயர்ந்து நிற்கின்றனர் .
மலையாளிகள் எங்களை பாண்டிகள் என்றும் நாகர்கோவிலை தாண்டினால் வந்தோடி மலையாளிகள் என்று அழைத்தாலும் அணைத்து உலக மக்களும் வியக்கும் வண்ணம் வள்ளுவ தமிழராகிய நாங்கள் அணைத்து துறைகளிலும் வென்று தமிழர் பெருமையை நிலைநாட்டி வருகிறோம் .
வாழ்க தமிழ்!!!! வளர்க குமரி தமிழர்கள் !!!!!!




No comments: